Press "Enter" to skip to content

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முச்சோவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவை(செக்குடியரசு) எதிர்கொண்டார். 

விறுவிறுப்பான இந்த மோதலில் முச்சோவா 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 1 மணி 49 நிமிடங்கள் நீடித்தது. இந்த பருவத்தில் டாப்-5 இடத்தில் உள்ள வீராங்கனையை முச்சோவா வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »