Press "Enter" to skip to content

கொரோனா அச்சம்… 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல்

கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் குழுயும் உறுதியளித்துள்ளன.

டோக்கியோ:

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10000 தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் குழுயும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா என்று தெரியவில்லை. 

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »