Press "Enter" to skip to content

“கோலியை எங்களிடம் கொடுங்கள்” விராட் கோலியும்- வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகையும்

ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று ரிஸ்லா ரெஹான் கூறி இருந்தார்.

புதுடெல்லி:

இந்தியா கேப்டன் விராட் கோலி உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். பெண்கள் மத்தியில் விராட் கோலி மிகவும் பிரபலமானவர். 2019 உலகக் கோப்பையின் போது கிரிக்கெட் பரம ரசிகையான ரிஸ்லா ரெஹான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ரிஸ்லா ரெஹான் ஒரு பாகிஸ்தான் பெண் ஆவர். ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் ஊடகம் உலகிற்கு அறிமுகமானார்.

இந்திய அணியை ஆதரிப்பதற்காக 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு சற்று முன்னதாக மான்செஸ்டரில் ரிஸ்லா கலந்து கொண்டார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்துடனான இந்தியாவின் அரையிறுதி மோதலுக்கு முன்னதாக ஒரு பேட்டியில் , ரிஸ்லா பாகிஸ்தான் அணி  கடைசி நான்கு போட்டிகளில் விளையாடும்  என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே அனுமதிச்சீட்டுகளை வாங்கியதாகக் கூறியிருந்தார்.பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் அது அவ்வாறு செயல்படவில்லை.

2019 உலகக் கோப்பையின் போது அவர் அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தானுக்கு பரிசு வழங்க விரும்பினால் நீங்கள் கேட்கும்  ஒரு விஷயம் என்ன என்று ரிஸ்லாவிடம் கேட்கப்பட்டது, ரிஸ்லா தயவுசெய்து எங்களுக்கு விராட் கோலி கொடுங்கள் என பதில் அளித்து இருந்தார். மேலும் ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று அவர் மேலும் கூறி இருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »