Press "Enter" to skip to content

பிரெஞ்சு ஓபன் – செரீனா வில்லியம்சை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் 8-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் காயத்தால் விலகியுள்ளார்.

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் 39 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 21 வயதான கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர்.

முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடினார். ஆனால் இரண்டாவது செட்டையும் ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

  

இறுதியில், ரிபாகினா  6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »