Press "Enter" to skip to content

ஒல்லி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம்

லார்ட்ஸ் தேர்வில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 மட்டையிலக்கு கைப்பற்றினார்.

லண்டன்:

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சோதனை போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

முதல் பந்துவீச்சு சுற்றில் அந்த அணி 378 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே 200 ஓட்டங்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அசத்தினார். 

மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார்.

பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்கவைத்தார். இதனால், இணையத்தில் ராபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன. ஒரு சிலர் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் அன்றைய தினம் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவீட்தான் தான் என தெரியவந்தது.

8 வருடங்களுக்கு முன்பு சில டுவீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. 

இந்நிலையில், ஒல்லி ராபின்சன் டுவீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »