Press "Enter" to skip to content

சீதோஷ்ண நிலை ஸ்விங், சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் விராட் கோலி திணறுவார்- க்ளென் டர்னர்

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா நியூசிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளனர் விமர்சகர்கள்.

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அதேவேளையில் இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கு ஏற்றதாக இருக்கும்.

இதனால் முதன்முறையாக நடைபெறும் ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற இந்தியாவை விட நியூசிலாந்துக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரகானே, புஜாரா அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் சவுத்தாம்ப்டன் சீதோஷ்ண நிலை ஸ்விங், சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், விராட் கோலி திணற வேண்டிய நிலை ஏற்படும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து க்ளென் டர்னர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தின் வேகம் குறைந்து விட்டதாக நான் யூகமாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஆடுகளம், ஒட்டுமொத்த சீதோஷ்ண நிலை ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நியூசிலாந்தில் திணறியதுபோல், இங்கும் திணற வேண்டிய நிலை ஏற்படலாம்.

மீண்டும் ஒருமுறை சீதோஷ்ண நிலை முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சொந்த இடத்தில் விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். நுட்பம் மற்றும் திறமையில் குறிப்பிடத்தகுந்த பகுதியாக விளங்குவார்கள்.

க்ளென் டர்னர்

இந்தியாவில் சில வருடங்களாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நியூசிலாந்து சூழ்நிலையுடன் இந்திய சூழ்நிலையை ஒப்பிட இயலாது. கடந்த முறை இந்திய அணி நியூசிலாந்து சென்று விளையாடும்போது அது வெளிப்பட்டது. இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அளவிற்கு ஒத்துப்போவதாக இருக்கும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »