Press "Enter" to skip to content

உலக சோதனை சாம்பியன்ஷிப் – மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து 101/2

இந்தியாவுக்கு எதிரான உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கான்வே அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

சவுத்தாம்ப்டன்:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக சோதனை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் பந்துவீச்சு சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்து.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம்  இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ஓட்டங்களில் வெளியேறினார். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில், இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ஓட்டங்கள் அடித்தார்.  

நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. டாம் லாதம், டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும்போது லாதம் 30 ஓட்டத்தில் அஸ்வினிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடிய கான்வே அரை சதம் கடந்தார். அவருக்கு கேப்டன் வில்லியம்சன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

கான்வே 54 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவிடம் அவுட்டானார். அதன்பின் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 மட்டையிலக்கு இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் அஷ்வின், இஷாந்த் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »