Press "Enter" to skip to content

அந்த்ரே ரஸலை திணறடித்த விண்மீன்க்: 4-வது டி20-யில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ஓட்டங்கள் விளாசினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ஓட்டத்தை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

4-வது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மட்டையாட்டம் தேர்வு செய்தது. தொடக்க வீரர் மேத்யூ வடே 5 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 53 ரன்களும், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 44 பந்தில் 75 ரன்களும் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ஓட்டங்கள் குவித்தார். எவின் லீவிஸ் 14 பந்தில் 31 ஓட்டங்கள் விளாசினார். கெய்ல் 1 ஓட்டத்தில் ஏமாற்றம் அளித்தார்.

கடைசி 2 சுற்றில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த்ரே ரஸல், பேஃபியன் ஆலன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் ஒரு சிக்ஸ், ஆலன் 3 சிக்ஸ் விளாசினர். ஆனால் கடைசி பந்தில் ஆலன் ஆட்டமிழந்தார். என்றாலும் 25 ஓட்டங்கள் இந்த சுற்றில் கிடைத்தது. இதனால் கடைசி சுற்றில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மிட்செல் விண்மீன்க் கடைசி ஓவரை வீழ்த்தினார். அந்த்ரே ரஸல் முதல் நான்கு பந்துகளை சந்தித்தார். அதில் ஒரு ஓட்டத்தை கூட அவரால் அடிக்க முடியவில்லை. 4-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 185 ரன்களே எடுத்து 4 ஓட்டத்தை வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

75 ரன்களுடன், 4 சுற்றில் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தி மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »