Press "Enter" to skip to content

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெட்வதேவ், ‌ஷபலென்கா அரைஇறுதிக்கு தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ‌ஷபலென்கா (பெலாரஸ்) – 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா) கால் இறுதியில் ஆலந்தை சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.

இதில் மெட்வதேவ் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 2019 அமெரிக்க ஓபனில் 2-வது இடத்தை பிடித்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மெட்வதேவ் அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த அகுர் அலிஸ்மியை எதிர்கொள்கிறார். அவர் கார்லோஸ் அல்காரஸ் கார்பியாவுக்கு (ஸ்பெயின்) எதிரான கால் இறுதியில் 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது கார்பியா போட்டியில் இருந்து விலகியதால் அலிஸ்மி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) – ஹாரீஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜோகோவிச் (செர்பியா) – பெர்டினாட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ‌ஷபலென்கா (பெலாரஸ்) – 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

இதில் ‌ஷபலென்கா 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினாவை (உக் ரைன்) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

அரைஇறுதி ஆட்டத்தில் ‌ஷபலென்கா- லேலா பெர்னாண்டஸ் மோதுகிறார்கள். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து) -எம்மா (இங்கிலாந்து), பிளிஸ்கோவா (செக் குடியரசு)- ‌ஷகாரி (கிரீஸ்) மோதுகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »