Press "Enter" to skip to content

இன்னும் ஒரேயொரு போட்டி… சரித்திர சாதனை படைக்க இருக்கும் ஜோகோவிச் சொல்கிறார்

அமெரிக்க ஓபனை வென்று டென்னிஸில் இரண்டு சரித்திர சாதனையை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளார் செர்பிய வீரர் ஜோகோவிச்.

டென்னிஸில் ஆண்டுதோறும் நான்கு (ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச், அமெரிக்கா) கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற முதல் மூன்று கிராண்ட் ஸ்லாம் (ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச்) போட்டிகளிலும் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தற்போது அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்.

இறுதிப் போட்டியில் டெனில் மெட்வதேவ்-ஐ நாளை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றால், ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்ற ஒரே வீரர் என்ற சரித்திர சாதனை படைப்பார் ஜோகோவிச். அத்துடன் தற்போது வரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 21-வது பட்டத்தை கைப்பற்றி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

இறுதிப் போட்டி குறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே இருக்கிறது. அதை செய்வோம். என்னுடைய இதயம், ஆத்மா, உடல், தலை என அனைத்தும் ஒரு போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இது என்னுடைய டென்னிஸ் வரலாற்றில் கடைசி போட்டி என்ற நோக்கத்தில் செயல்படுவேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »