Press "Enter" to skip to content

ஒயிட்-பால் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியை ரோகித்திடம் ஒப்படைக்கிறாரா விராட் கோலி?

டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால் ரோகித் சர்மாவிடம் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு  (சோதனை, ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் அவர் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது டோனி சோதனை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது விராட் கோலி சோதனை கேப்டன் ஆனார்.

2017-ம் ஆண்டு டோனி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இதற்கிடையே 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் தனது மட்டையாட்டம் திறன் பாதிக்கப்படுவதாக கோலி உணர்கிறார். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதே சரியானது என்று அவர் கருதுகிறார்.

இதனால் ஒயிட் பால் (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை அவர் ரோகித் சர்மாவிடம் கொடுக்கிறார். இதுதொடர்பாக அவர் அணி நிர்வாகம் மற்றும் ரோகித் சர்மாவிடம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகும், தந்தையான பிறகும் அவர் இந்த முடிவை தெரிவித்து இருக்கிறார்.

இதனால் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுகிறார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.

இந்தப்போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா ஒயிட் பால் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தொடர்ந்து சோதனை கேப்டனாக நீடிப்பார்

விராட் கோலி 95 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 65-ல் வெற்றி கிடைத்துள்ளது. 27 போட்டிகளில் தோற்றது. 2 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 45 இருபது சுற்றிப் போட்டியில் 29-ல் இந்தியா வெற்றி பெற்றது. 14-ல் தோல்வி ஏற்பட்டது. 2 போட்டி முடிவு இல்லை.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 132 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 62-ல் வெற்றி பெற்றார். 66 போட்டிகளில் தோற்றார். 4 ஆட்டங்கள் முடிவு இல்லை. ஆனால் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுக்கவில்லை.

ரோகித் சர்மா உலகின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் ஒருநாள் போட்டியில் 10 ஆட்டங்களுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 8 வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. 19 இருபது சுற்றிப் போட்டியில் 15-ல் வெற்றி கிடைத்தது. 4-ல் தோல்வி ஏற்பட்டது.

ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 2018-ல் இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியிலும், ஆசிய கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை 123 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இதில் 74 போட்டியில் வெற்றி பெற்றார். 49-ல் தோல்வி ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி காட்டுத்தீ போன்று வேகமாக பரவி வரும் நிலையில், பி.சி.சி.ஐ. இந்த செய்தி எந்த உண்மையும் இல்லை என திட்டவட்டாக மறுத்துள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘இது எல்லாம் பொய்யான செய்தி. இதுகுறித்து எதுவும் நடக்கவில்லை. ஊடகம்தான் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தவில்லை. கேப்டன் பதவியை பிரித்து வழங்குவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »