Press "Enter" to skip to content

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா

யார்க்கர் மன்னனாக திகழ்ந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர். ஒரே சுற்றில் நான் மட்டையிலக்குடுகள் வீழ்த்தி அசத்தியவர்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்த மலிங்கா, கடந்த 2011-ம் ஆண்டு சோதனை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தற்போது டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா விடைபெற்றுள்ளார்.

38 வயதாகும் மலிங்கா 2004-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி சோதனை போட்டியிலும், ஜூலை 17-ந்தேதி ஒருநாள் போட்டியிலும், 2006-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக அறிமுகம் ஆனார்.

30 சோதனை போட்டிகளில் 101 மட்டையிலக்குடுகளும், 226 ஒருநாள் போட்டிகளில் 338 மட்டையிலக்குடுகளும், 84 டி20 போட்டிகளில் 107 மட்டையிலக்குடுகளும் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஐந்து மட்டையிலக்கு வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »