Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ்க்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

விராட் கோலி, மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 166 ஓட்டங்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றார்.

ஆர்.சி.பி. அணியின் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் ரன்ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மட்டையிலக்கு கீப்பர் ஸ்ரீகர் பரத் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்ரீகர் பரத் 24 பந்தில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 42 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பரத்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெடடுக்கு 43 பந்தில் 68 ஓட்டங்கள் சேர்த்தது.

விராட் கோலி அவுட்டாகும்போது ஆர்.சி.பி. 15.5 சுற்றில் 126 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 4-வது மட்டையிலக்குடுக்கு மேக்ஸ்வெல் உடன் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது. 18-வது சுற்றில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 33 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 18-வது சுற்றில் ஆர்.சி.பி. 17 ஓட்டங்கள் அடித்தது.

19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு தூக்கிய மேக்ஸ்வெல் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 56 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 6 பந்தில் 11 ஓட்டங்கள் எடுத்தார். இந்த சுற்றில் 6 ஓட்டங்கள் எடுத்து 2 முக்கிய மட்டையிலக்குடுகளை ஆர்.சி.பி. இழந்தது.

ஆர்.சி.பி. 19 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்டது. கடைசி சுற்றில் பவுல்ட் 1 மட்டையிலக்கு வீழ்த்தி 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆர்.சி.பி. 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »