Press "Enter" to skip to content

இந்திய அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் இணை-உரிமையாளர் பார்த் ஜிண்டால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.பி.எல். டி20 உலகக் கோப்பை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரஷாப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஷ்வின், அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஷிகர் தவான்தான் தற்போது வரை அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஆர்.சி.பி. அணியின் சஹல் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை-உரிமையாளர் பார்த் ஜிண்டால் இந்திய அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்த் ஜிண்டால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் ஏன் சில முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்து தேர்வாளர்கள் யோசிக்க வேண்டும். நம்முடைய டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நம்முடைய சிறந்த பேட்ஸ்மேன் இடம் பெறவில்லை. உங்களால் யூகிக்க முடிகிறதா?’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் சிறந்த டி20 ஸ்பின்னரும் மிஸ்சிங் எனக் குறிப்பிட்டுள்ளார். ஷிகர் தவான் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும், ஆர்.சி.பி.யின் சஹலும் அணியில் இடம் பிடிக்காதது குறித்து ஜிண்டால் குறிப்பிட்டிருக்கலாம் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யர 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ஆனால் ஐ.பி.எல். போட்டியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் 47 (ஆட்டமிழக்காமல்), 43 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »