Press "Enter" to skip to content

ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு அபாரம்: பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

நான்கு சுற்றில் 40 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 6 மட்டையிலக்குடில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 135 ஓட்டங்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கிராம் 42 ஓட்டங்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பொல்லார்டு ஆகியோர் தலா இரண்டு மட்டையிலக்குடுகள் வீழ்த்தினர்.

பின்னர் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 16 ரன்னுக்குள் இரண்டு முக்கிய மட்டையிலக்குடுகளை இழந்தது. 3-வது மட்டையிலக்குடுக்கு டி காக் உடன் சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டி காக் 27 ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5-வது மட்டையிலக்குடுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தபோது, மும்பை இந்தியன்ஸ் 15.1 சுற்றில் 92 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  29 பந்தில் 45 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவர் முடிவில் 97 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி 4 சுற்றில் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த சுற்றில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் 11 ஓட்டங்கள் கிடைத்தது. 18-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த சுற்றில் பொல்லார்டு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த சுற்றில் 13 ஓட்டங்கள் கிடைத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ்க்கு கடைசி 2 சுற்றில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஷமி வீசினார். 3-வது பந்தையும், 5-வது பந்தையும் பவுண்டரிக்கு தூக்கிய ஹர்திக் பாண்ட்யா, கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 19 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்து 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 40 ஓட்டங்கள் எடுத்தும், பொல்லார்டு 7 பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »