Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021 – ஐதராபாத்தை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.

துபாய்:

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ஓட்டத்தில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 26 ஓட்டத்தில் ரன்அவுட்டானார். அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடித்தனர்.

ஐதராபாத் அணி 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 8 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும்  அவுட்டாகினர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டத்தில் வெளியேறினார். நிதிஷ் ராணா 25 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இது கொல்கத்தா அணி பெறும் 6வது வெற்றி ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »