Press "Enter" to skip to content

முறைகேடான நிதி முதலீடு – தெண்டுல்கரின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது

நீரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரியவந்துள்ளது.

கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்று உள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான 3 மாதங்களில் விர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனத்தை கலைக்கும்படி தெண்டுல்கர் கேட்டுக் கொண்டதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த நிதி முறைகேடு முதலீடு அறிக்கையை தயாரித்த அமைப்பு தெண்டுல்கரின் வக்கீலிடம் கேட்டனர். அவரது வக்கீல் இது தொடர்பாக எங்களிடம் கூறும்போது தெண்டுல்கரின் முதலீடு சட்டப்பூர்வமானது. வரி அதிகாரிகளிடம் இது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நீரவ்மோடி நாட்டை விட்டு தப்பி செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அவரது சகோதரி தொழில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்துள்ளது. பிரபல பாப் இசை பாடகி ‌ஷகிரா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரும் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா தரப்பில் 6 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 7 பேரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »