Press "Enter" to skip to content

ஐ.பி.எல். பிளே-ஆஃப் சுற்று: 4-வது இடத்திற்கு நான்கு அணிகள் கடும் போட்டி- புள்ளிகள் பட்டியல் ஒரு ஆய்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே-ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிய நிலையில் 4-வது இடத்திற்கு நான்கு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. 56 லீக் போட்டிகளில் இதுவரை 49 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (9 வெற்றி), டெல்லி கேப்பிடல்ஸ் (9 வெற்றி), ஆர்.சி.பி. (8 வெற்றி) அணிகள் தலா 12 போட்டிகளில் விளையாடிய நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

4-வது இடத்திற்கு இன்னும் ஒரு அணி முன்னேற வேண்டும். இதற்காக வாய்ப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

கொல்கத்தா 13 போட்டிகளில் விளயைாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13-ல் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி தலா ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நான்கு அணிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெறும் அணி உறுதியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் நிகர ரன்ரேட் முறையில் ஒரு அணி முன்னேறும்.

நாளை ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 6 வெற்றிகளை பதிவு செய்யும். கடைசி போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

வருகிற 7-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாப் வெற்றி பெற்றால் 6 வெற்றியுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் முன்னேற முடியுமா? என எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 

அன்றைய தினம் மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (ராஜஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தால்)  தானாகவே வெளியேறிவிடும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ஏழு வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் ஆறு வெற்றிகள் பெற்றிருக்கும். 

பஞ்சாப் கிங்ஸ்

8-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால் 6 வெற்றிகள் பெற்றிருக்கும். அப்போது நான்கு அணிகளில் ஒரு அணி நிகர ரன்ரேட் அடிப்படையில்  பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »