Press "Enter" to skip to content

தொடக்க ஜோடி ஏமாற்றம்: டெல்லிக்கு 137 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஏமாற்றம் அளித்த நிலையில், அம்பதி ராயுடு அரைசதம் அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் 136 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை அணியில் ரெய்னாவிற்குப் பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர்களாக ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினார். வழக்கமாக சிறப்பான தொடக்கம் கொடுக்கும் இந்த ஜோடி இன்று ஏமாற்றியது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும் ஆட்டழிழந்தனர்.

அதன்பின் சென்னை அணியால் ஸ்கோர் குவிக்க முடியவில்லை. ராபின் உத்தப்பா 19 பந்தில் 19 ரன்களும், மொயீன் அலி 8 பந்தில் 5 ரன்களும் சேர்த்தனர்.

5-வது மட்டையிலக்குடுக்கு அம்பதி ராயுடு உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 8.3 சுற்றில் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ராயுடு, எம்.எஸ். டோனி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 17 சுற்றில் சி.எஸ்.கே. 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

18-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த சுற்றில் அம்பதி ராயுடு ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் 14 ஓட்டங்கள் கிடைத்தது. 19-வது சுற்றில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 14 ஓட்டங்கள் கிடைத்தது. அத்துடன் அம்பதி ராயுடு 40 பந்தில் அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரை அவேஷ் கான் வீசினார். முதல் பந்தை சந்தித்த எம்.எஸ். டோனி ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 18 ஓட்டங்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு- டோனி ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்தது. இந்த சுற்றில் நான்கு ஓட்டங்கள் மட்டுமே கிடைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 136 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »