Press "Enter" to skip to content

ஐ.பி.எல். 2021 பருவத்தில் அதிவேகமாக பந்து வீசி, ஜம்மு-காஷ்மீர் இளம் வீரர் உம்ரான் மாலிக் சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி, ஜம்மு-காஷ்மீர் இளம் வீரர் உம்ரான் மாலிக் சாதனைப் படைத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த ஐதராபாத் அணி 141 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 142 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்.சி.பி. அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்.சி.பி. 4 ஓட்டத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உம்ரான் மாலிக் இடம் பிடித்திருந்தார். இவர் அந்த அணியின் வழக்கமான வீரர் இல்லை. சந்தீப் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் வலைப்பயிற்சி பந்து வீச்சாளரில் இருந்து முதன்மை அணிக்கு மாறினார்.

நேற்று போட்டியின் 2-வது ஓவரை வீசினார். முதல் பந்தை 147 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். நான்காவது பந்தை 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். புல்-டாஸாக வீசப்பட்ட இந்த பந்து ஐ.பி.எல். 2021 பருவத்தில் மிகவும் வேகமாக வீசப்பட்ட பந்தாக கருதப்படுகிறது.

இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லூக்கி பெர்குசன் 152.75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதை உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.

21 வயதாக உம்ரான் மாலிக் இவ்வாறு சிறப்பாக பந்து வீசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தாலேகர், அடுத்த ஐ.பி.எல். தொடரில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் முறையான பந்து வீச்சாளராக இருக்கிறார். இவருக்குப் பிறகு இன்னும் வீரர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இர்பான் பதான் டேக் செய்து ஹர்ஷா போக்லே, ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இருக்கிறார்களா? எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டியில் 4 சுற்றில் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »