Press "Enter" to skip to content

இந்தியாவை வென்றால் எங்களுக்கு பிளாங்க் செக் ஆயத்தம்: பாக். கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா சொல்கிறார்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இருந்து வருகிறது. வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தான் வந்து விளையாட வைக்க பல கட்ட முயற்சிகளை எடுத்தது.

இதனால் நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தன. நியூசிலாந்து போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் கிரிக்கெட் விளையாட முடியாது என தொடரை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்தது.

இது பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் அளவிலும், பொருளாதார அளவிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் 50 சதவீத நிதியால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செயல்பட்டு வருகிறது. ஐ.சி.சி.க்கு 90 சதவீத நிதி பிசிசிஐ-யிடம் இருந்து வருகிறது.

ஐ.சி.சி.-க்கான நிதியை பி.சி.சி.ஐ. நிறுத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிலைகுலைந்து போகும் என நான் அஞ்சுகிறேன். ஏனென்றால் ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் நிதி ஏதும் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை வலுப்படுத்த வேண்டும் என நான் தீர்மானித்தேன்.

ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம், டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால், பிளாங்க் செக் தயாராக இருக்கிறது என்று கூறினார். எங்களுடைய பொருளாதாரம் வலுவாக இருந்தால் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளால் பயன்படுத்தப்பட்டிருக்க மாட்டோம்’’ என்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »