Press "Enter" to skip to content

டி20 உலக கோப்பை – இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நெட் பவுலராக தேர்வு

உம்ரான் மாலிக் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்து வீசியதைப் பார்த்த விராட் கோலி, இவரது திறமையை வெகுவாகப் பாராட்டினார்.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான உம்ரான் மாலிக். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி பலரது கவனத்தை ஈர்த்தார். இவரது திறமையைக் கண்டு விராட் கோலியும் வெகுவாக பாராட்டினார். 

ஐ.பி.எல். தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்களின் திறமைகளை வளர்க்கிறது. ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் 150  கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதைப் பார்க்க நன்றாக உள்ளது என தெரிவித்தார்.

ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த அவர் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் தற்போது டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நெட் பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல்.லில் மணிக்கு 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக பந்துவீசியவர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »