Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்

பிரித்வி ஷா அரைசதம் விளாச ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. ஷகர் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேசில்வுட் வீசிய 2-வது சுற்றில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது சுற்றில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் டெல்லி 3 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 32 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்த ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்தார். 5-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த சுற்றில் பிரித்வி ஷா இரண்டு சிக்சர்கள் விளாசினார். இந்த சுற்றில் 14 ஓட்டங்கள் அடித்தது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 5 சுற்றில் 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 50 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த சுற்றில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் ஒரு ஓட்டத்தை மட்டுமே அடித்தார்.

அதன்பின் டெல்லி அணியின் ரன்வேகத்தில்  தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடித்தார். 10 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அரைசதம் அடித்த பிரித்வி ஷா 34 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது மட்டையிலக்குடுக்கு ரிஷாப் பண்ட் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். டெல்லி அணி 13.2 சுற்றில் 100 ஓட்டத்தில்க் கடந்தது.

ரிஷாப் பண்ட், ஹெட்மையர் ஜோடி ஓவர் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  17.3 சுற்றில் 150 ஓட்டத்தில்த் தொட்டது.

19-வது ஓவரின் 4-வது பந்தில் ஹெட்மையர் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 37 ஓட்டங்கள் அடித்தார். ஹெட்மையர்- ரிஷாப் பண்ட் ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 83 ஓட்டங்கள் குவித்தது.

19-வது சுற்றில் டெல்லி அணிக்கு 11 ஓட்டங்கள் கிடைத்தது. கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் மூன்று பந்திலும் ரிஷாப் பண்ட் ஓட்டத்தை அடிக்கவில்லை. 4-வது பந்தை பவுண்டரி அடித்த பண்ட், ஐந்தாவது பந்தில் 2 ஓட்டங்கள் அடித்தார். கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரிஷாப் பண்ட் 35 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 மட்டையிலக்குடும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »