Press "Enter" to skip to content

ஐபிஎல் 2வது குவாலிபயர்- டெல்லி அணியை 135 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும்

ஷார்ஜா:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.  இதில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மார்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும் என்பதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின.  

நிதானமாக ஆடிய டெல்லி அணியை 135 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா. துவக்க வீரர் பிருத்வி ஷா 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது மட்டையிலக்கு ஜோடி (ஷிகர் தவான்-ஸ்டாய்னிஸ்) சற்று தாக்குப்பிடித்து ஆடியது. ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்டாய்னிஸ் 18 ரன்களும் சேர்த்தனர். 

ரிஷப் பண்ட் 6, ஹெட்மயர் 17 ஓட்டங்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 ஓட்டங்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 135 ரன்களே சேர்த்தது.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 மட்டையிலக்கு வீழ்த்தினார். பெர்குஷன், ஷிவம் ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர்.

இதையடுத்து 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »