Press "Enter" to skip to content

ஜோகோவிச் விசா ரத்துச் செய்யப்பட்டதற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தடை

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான நீதிமன்றப் போராட்டத்தில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றுள்ளார்.

மெல்போர்ன்:

டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம்  கடந்த புதன்கிழமை மெல்போர்ன் நகரை அடைந்தார். 

முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாரா இல்லையா என்பதை தெரிவிக்க மறுத்திருந்தார். மேலும் அவரிடம் மருத்துவ விதிவிலக்கு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மேலும் அவரது விசா ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக ரத்துச் செய்தது.

இதனால் மெல்போர்ன் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் விசா ரத்து செய்யப்பட்டதால் வியாழக்கிழமை முதல் ஜோகோவிச் ஹோட்டல் தனிமைப்படுத்தல் காவலில் வைக்கப்பட்டார். 

இதையடுத்து விசா ரத்துக்கு எதிராக மெல்போர்னில் உள்ள நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 11 காரணங்களை ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர். 

டிசம்பரில் ஜோகோவிச்சிற்கு கடுமையான பெரிய நோய் இருந்ததாக எந்த தரவும் இல்லை என்றும் இது தொடர்பான அவரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் நீதிமன்றத்தில் அவர்கள் வழங்கினர்.  

இருதரப்பு வாதங்கள் கேட்ட நீதிபதி அந்தோனி கெல்லி,  ஜோகோவிச் விசாவை ரத்துச் செய்த உத்தரவிற்கு தடை விதித்தார்.  நீதிமன்ற வழக்கில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »