Press "Enter" to skip to content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடங்கியது ‌- ஷக்காரி, சுவிட்டோலினா 2-வது சுற்றுக்கு தகுதி

உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். விசா ரத்துக்கு எதிரான அவரது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மெல்போர்ன்:

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும். டென்னிசில் இந்த போட்டிகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

5-வது வரிசையில் இருக்கும் மரியா ‌ஷக்காரி (கிரீஸ்) தொடக்க சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த மரியாவை எதிர்கொண்டார். இதில் ‌ஷக்காரி 6-4, 7-6 (7-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

15-வது வரிசையில் உள்ள எலினா சுவிட்டோலினா (உக்ரைன்) 6-1, 7-8 (7-4) என்ற கணக்கில் பிரான்சை சேர்ந்த பியானோ  பெரோவை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் உள்ள ஓசாகா (ஜப்பான்), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 14-வது வரிசையில் உள்ள டெனிஸ் சபோவலோவ் (கனடா) – லாஸ்லோ (செர்பியா) மோதினார்கள். இதில் சபோவலோவ் 7-6 (7-3), 6-4, 3-6, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல 17-வது வரிசையில் இருக்கும் மான்பில்ஸ் (பிரான்சு), லஜோவிச் (செர்பியா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள்.

உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். விசா ரத்துக்கு எதிரான அவரது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

புதிய சாதனை படைக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அந்த வாய்ப்பை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »