Press "Enter" to skip to content

1,214 வீரர்கள் பதிவு: ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் கெய்ல், விண்மீன்க், ஆர்ச்சர் இடம்பெறவில்லை

முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், விண்மீன்க், ஆர்ச்சர் ஆகியோர் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பருவத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன்படி 8 அணிகளும் 27 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று வெளியானது. லக்னோ அணியில் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோய்னிஸ் (ரூ.9.2 கோடி), பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரும், அகமதாபாத் அணியில் ஹர்த்திக் பாண்ட்யா, ரஷித் கான் தலா (ரூ.15 கோடி), சுப்மன் கில் (ரூ.8 கோடி) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்த்திக் பாண்ட்யா அகமதாபாத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் இன்று வெளியானது.

270 சர்வதேச வீரர்கள், 312 புதுமுக வீரர்கள், அசோசியேட் நாடுகளை சேர்ந்த 41 வீரர்கள் உள்பட மொத்தம் 1,214 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும். ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். இதற்கான பட்டியலில் 49 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை பெற்ற வார்னர், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், தவான், இஷான் கி‌ஷன், ரெய்னா, படிக்கல், அம்பதி ராயுடு, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் சுமித், கம்மின்ஸ், ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா), டு பிலிஸ்சிஸ், குயிண்டன் டி காக், ரபடா (தென் ஆப்பிரிக்கா), பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), பவுல்ட் (நியூசிலாந்து), மார்க்வுட் (இங்கிலாந்து), சாஹிப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) ஆகிய வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17 இந்திய வீரர்களுக்கும், 32 வெளிநாட்டு வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ.2 கோடி ஆகும்.

ஐ.பி.எல். போட்டியில் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் ஏலப்பட்டியலில் இடம்பெறவில்லை. விண்மீன்க் (ஆஸ்திரேலியா), ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் (இங்கிலாந்து) ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை.

10 அணிகளும் இதுவரை 33 வீரர்களுக்காக ரூ.338 கோடியை செலவழித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »