Press "Enter" to skip to content

சீனியர் வீரர் முகமது சமி மீது கோபம் அடைவதா? ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

மூத்த வீரர் முகமது சமி மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் புதிய அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்சுக்கு ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக உள்ளார்.

ஆடுகளத்தில் அவர் சக வீரர்கள் மீது தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது வெளிநாட்டு வீரரான டேவிட் மில்லர் மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபப்பட்டது டெலிவி‌ஷனில் தெளிவாக தெரிந்தது.

இதேபோல ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது சீனியர் வீரரான முகமது சமி மீது கோபத்தை வெளிப்படுத்தினார். ராகுல் திரிபாதி கொடுத்த கேட்சை பிடிக்க டீப்தேர்ட்மேன் பகுதியில் இருந்த ‌சமி பெரிதாக முயற்சி செய்யவில்லை. பந்து பவுண்டரிக்கு சென்று விடாமல் இருக்கும் வகையில் அவர் தடுத்தார்.

‌சமி அந்த கேட்சை பிடிக்க முயலாததால் ஹர்த்திக் பாண்ட்யா அவர் மீது கோபம் அடைந்தார்.

இதை டெலிவி‌ஷனில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூத்த வீரர் முகமது ‌சமி மீது ஹர்த்திக் பாண்ட்யா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.

அணி வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தெரியவில்லை. ‌சமி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் பங்களித்து வருகிறார். அவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று பலரும் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு கண்டனம் தெரிவித்துப் பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் அணியின் கேப்டனான மயங்க் அகர்வாலும் பீல்டிங்கில் சொதப்பும் சக வீரர்கள் மீது கோபப்படுவார். இவர்கள் டோனியிடம் இருந்து எப்படி நிதானமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »