Press "Enter" to skip to content

கடைசி 5 ஓவர்களில் திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம்- ஜடேஜா

பந்துவீச்சில் எங்களது தொடக்கம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 6 சுற்றில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மில்லர் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார் என சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.

புனே:

ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப் பட்ட 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 169 ஓட்டத்தை எடுத்தது.

ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 மட்டையிலக்குடும், முகமது ‌ஷமி, யாஷ் தயாள் தலா 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 170 ‌ ஓட்டத்தை எடுத்து 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவிட் மில்லர் 51 பந்தில் 94 ஓட்டத்தை (8 பவுண்டரி, 6 சிக்சர் ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். தற்காலிக கேப்டன் ரஷீத்கான் 21 பந்தில் 40 ஓட்டத்தை (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து உதவியாக இருந்தார். பிராவோ 3 மட்டையிலக்குடும் , தக்ஷீனா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

சி.எஸ்.கே. அணி 5-வது தோல்வியை சந்தித்தது. இதனால் பிளேஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினமான ஒன்றாகும். எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:-

பந்துவீச்சில் எங்களது தொடக்கம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 6 சுற்றில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மில்லர் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த ஆடுகளத்தில் 169 ஓட்டத்தை என்பது சமமான ஸ்கோராகவே நாங்கள் கருதினோம்.

கடைசி 5 ஓவர்களில் நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை.

கிறிஸ் ஜோர்டான் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். இதனால்தான் எனக்கு பதிலாக கடைசி 2 ஓவரை அவருக்கு கொடுத்தேன். அவரால் 4 முதல் 5 யார்க்கர் பந்துகளை வீச இயலும். துரதிருஷ்டவசமாக இந்த ஆட்டத்திலும் அப்படி நிகழவில்லை. இதுதான் 20 சுற்றிப் போட்டியின் அழகாகும்.

இவ்வாறு ஜடேஜா கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 21-ந் தேதி எதிர் கொள்கிறது.

குஜராத் அணி 5-வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் 10 புள்ளியுடன் அந்த அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 23-ந் தேதி சந்திக்கிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »