Press "Enter" to skip to content

ஐபிஎல் தொடரில் 21-வது ஹாட்ரிக்- சாதனை படைத்த சாஹல்

ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ஹாட்ரிக் மட்டையிலக்கு எடுத்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 17-வது சுற்றில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார்.

இந்த ஐ.பி.எல்.லில் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தவர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இது ஐ.பி.எல். வரலாற்றில் 21-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும்.

இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ‘ஹாட்ரிக்’ மட்டையிலக்கு எடுத்தார். 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படவில்லை.

ஐ.பி.எல்.லில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர்கள் விவரம்:-

அமித் மிஸ்ரா ( 3 தடவை), யுவராஜ்சிங் (2 முறை), எல்.பாலாஜி, நிதினி, ரோகித் சர்மா, பிரவீண்குமார், அஜீத் சண்டிலா, சுனில் நரீன், பிரவீன் தாம்பே, வாட்சன், அக்‌ஷர்பட்டேல், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரூடை, ஜெயதேவ் உனட்கட், சாம்கரண், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்‌ஷல்படேல், யசுவேந்திர சாஹல் (தலா 1 தடவை).

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »