Press "Enter" to skip to content

லக்னோ-பெங்களூர் இன்று மோதல்: 5-வது வெற்றி யாருக்கு?

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.

மும்பை:

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3- வது இடத்திலும், பெங்களூரூ 4-வது இடத்திலும் உள்ளன.இதனால் 5- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ அணி, சென்னையை 6 மட்டையிலக்கு வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன்னிலும், டெல்லியை 6 மட்டையிலக்குடிலும், மும்பையை 18 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது. குஜராத் அணியிடம் 5 மட்டையிலக்குடிலும், ராஜஸ்தானிடம் 3 ரன்னிலும் தோற்றது.

அந்த அணியில் கேப்டன் ராகுல், குயின்டன் டிகாக், ஸ்டோனிஸ், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

பெங்களூரூ அணி கொல்கத்தா (3 மட்டையிலக்கு), ராஜஸ்தான் (4 மட்டையிலக்கு), மும்பை (7 மட்டையிலக்கு), டெல்லி (16 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. பஞ்சாப்பிடம் 5 மட்டையிலக்குடிலும், சென்னையிடம் 23 ரன்னிலும் தோற்றது.

அந்த அணியில் கேப்டன் டுபெலிசிஸ், தினேஷ் கார்த்திக், விராட் கோலி, மேக்ஸ்வெல், ஹசரங்கா, ‌ஷபாஸ் அகமது போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »