Press "Enter" to skip to content

டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்- ஜடேஜா

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை டோனி உலகுக்கு காட்டி இருக்கிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை 20 சுற்றில் 7 மட்டையிலக்குடுக்கு 155 ஓட்டத்தை எடுத்தது. சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 மட்டையிலக்குடும், பிராவோ 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் மட்டையிலக்கு வீழ்ந்தது. கடைசி சுற்றில் சென்னை வெற்றிக்கு 17 ஓட்டத்தை தேவைப்பட்டது.

ஜெய்தேவ் உனட்கட் அந்த சுற்றில் டோனி 3 மற்றும் 4-வது பந்துகளை முறையே சிக்சர், பவுண்டரி விளாசினார். 5-வது பந்தில் இரண்டு ஓட்டத்தை எடுத்தார். கடைசி பந்தில் 4 ஓட்டத்தை தேவை என்ற நிலையில் டோனி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதி வரை பரபரப்புடன் சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்பதை டோனி மீண்டும் நிரூபித்தார்.

வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஜடேஜா கூறியதாவது:-

ஆட்டம் செல்லும் விதத்தால், உண்மையில் நாங்கள் மிகவும் பதற்றமாக இருந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் களத்தில் விளையாட்டின் சிறந்த பினி‌ஷர் (டோனி) இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் கடைசி பந்து வரை விளையாடினால், நிச்சயமாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவிடுவார் என்பது எங்களுக்கு தெரியும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது டோனி உலகுக்கு காட்டி இருக்கிறார். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

இதனால் எப்போது செயல்பட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். நாங்கள் போட்டியை வெல்லவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். எங்களின் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் கேட்ச்களை தவறவிட முடியாது என்றார்.

மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, இறுதிவரை எங்களிடம் இருந்து சிறந்த போராட்டம் வெளிப்பட்டது. மட்டையாட்டம் சரியில்லாத பிறகு பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை தக்க வைத்ததாக நினைத்தேன். ஆனால் இறுதி கட்டத்தில் டோனி எவ்வாறு அமைதியானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் தனது அணியை வெற்றி பெற வைத்துவிட்டார்.

ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்ள் அதிக ஓட்டங்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் தொடக்கத்தில் சில மட்டையிலக்குடுகளை இழந்த பிறகு சுதந்திரமாக விளையாடுவது எப்போதும் கடினமாக இருக்கும் என்றார்.

டோனிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. ஸ்ரீகாந்த், ஷேவாக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, முகமது கைப், ரஷித்கான் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »