Press "Enter" to skip to content

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில் மும்பை-லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த லக்னோ அணி 6 மட்டையிலக்குடுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது. 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 8 மட்டையிலக்குடுகளை இழந்து 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் போது பந்து வீசுவதில் லக்னோ அணி அதிக நேரம் எடுத்து கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு ஐபிஎல் விதிப்படி 24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது அவர்களது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த பருவத்தில் 2-வது முறையாக கேஎல் ராகுலுக்கு மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »