Press "Enter" to skip to content

குஜராத்துடன் இன்று மோதல்- ஐதராபாத் முதல் இடத்துக்கு முன்னேறுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத்-வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை:

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 39 ஆட்டங்கள் முடிந்து விட்டன.

ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றி 2 தோல்வியுடனும், குஜராத் டைட்டன்ஸ் 6 வெற்றி, 1 தோல்வியுடனும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் , குஜராத். 2-வது இடத்திலும் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி , 2 தோல்வியுடனும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி , 3 தோல்வியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 வெற்றி, 4 தோல்வியுடனும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த அணிகள் முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் 8 புள்ளியும் (4 வெற்றி, 4 தோல்வி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (3 வெற்றி , 4 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 3 வெற்றி, 5 தோல்வி ) தலா 6 புள்ளியும் பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளி பெற்று உள்ளது. மும்பை இந்தியன்ஸ் தான் மோதிய 8 ஆட்டத்திலும் தோற்றது.

‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத்-வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். குஜராத் அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒரு போட்டியில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றது.

குஜராத் அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 8 மட்டையிலக்குடில் தோற்றது. இதனால் பதிலடி கொடுத்து 7-வது வெற்றியுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. அதன்பின்னர் தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது.

குஜராத்தை மீண்டும் வீழ்த்தி ஐதராபாத் 6-வது வெற்றியுடன் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் ஓட்டத்தை ரேட் நன்றாக இருக்கிறது.

ஐதராபாத் அணியின் பலமே வேகப்பந்து வீச்சுத்தான். புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன், ஜான்சென் ஆகியோர் சிறந்த வேகப்பந்து வீரர்களாக உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »