Press "Enter" to skip to content

பேட் கம்மின்சை வெளியில் உட்கார வைப்பது சரியான முடிவு இல்லை- யுவராஜ் சிங்

கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிதிஷ் ரானா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்து வீச்சில் 4 பவுலர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 5-வது பவுலராக ரசல் இருந்தார். இந்த போட்டியில் டிம் சவுத்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் அணியில் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கொல்கத்தா அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அணியில் சேர்க்காதது சரியான முடிவு இல்லை. அவர் இடம் பெற்றிருந்தால் கொல்கத்தா அணி 2 அல்லது 3 வெற்றிகளை பெற்றிருக்க முடியும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »