Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – பஞ்சாப் வெற்றி பெற 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் டி காக், தீபக் ஹூடா ஜோடி 2 வது மட்டையிலக்குடுக்கு 85 ஓட்டங்கள் சேர்த்தது.

புனே:

புனேவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, லக்னோ அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் 6 ஓட்டத்தில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவருக்கு தீபக் ஹூடா ஒத்துழைப்பு கொடுத்தார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ஓட்டத்தில் டி காக் அவுட்டானார். ஹூடா 34 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் என யாரும் நிலைத்து நிற்கவில்லை.   

இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 153 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 4 மட்டையிலக்குடும், ராகுல் சாஹர் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »