Press "Enter" to skip to content

ஐபிஎல் – குஜராத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களுடன் அந்த அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »