Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் – சச்சின் சாதனையை சமன்செய்தார் ருதுராஜ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 182 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது.

மும்பை:

ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற 46வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அதிரடியாக ஆட 2 மட்டையிலக்கு இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. ருதுராஜ் 99 ஓட்டத்தில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அடுத்து ஆடிய ஐதராபாத் 6 மட்டையிலக்குடுக்கு 189 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் சமன்செய்துள்ளார்.  

ஐபிஎல் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் 31 சுற்றுகளில் 1,076 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 34 சுற்றுகளில் 1000 ரன்களை அடித்த ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பண்ட் (35), தேவ்தத் படிக்கல் (35) ஆகிய இருவரும் 3ம் இடத்திலும், ரோகித் சர்மா (37), எம்.எஸ்.டோனி (37) ஆகிய இருவரும் 4ம் இடத்திலும் உள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »