Press "Enter" to skip to content

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க ரஷிய கிளப் கால்பந்து அணிகளுக்கு தடை

சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.

பாரிஸ்:

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ரஷியா மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த பருவம் சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “2022-23ம் ஆண்டு பருவத்தில் கிளப் போட்டிகளில் எந்த ரஷிய கிளப் அணிகளும் விளையாட அனுமதி கிடைக்காது. மேலும் அறிவிப்பு வரும் வரை ரஷிய கிளப் அணிகள் மற்றும் தேசிய அணிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடக்கும் பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ரஷிய அணி விலக்கப்பட்டது. அதற்கு பதில் போர்ச்சுக்கல் அணி இடம் பெற்றது.

மேலும் 2028 அல்லது 2032ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் ரஷியாவின் முயற்சியும் தகுதி இல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »