Press "Enter" to skip to content

பேட்ஸ்மேன்களின் திறமையை அறிய முதலில் மட்டையாட்டம் செய்தோம்- ஹர்த்திக் பாண்ட்யா

தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் மட்டையாட்டம் செய்த குஜராத் 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 143 ஓட்டத்தை பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ஓட்டத்தை எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 மட்டையிலக்கு கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் 16 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 145 ஓட்டத்தை எடுத்து வென்றது. ஷிகர் தவான் 62 ரன்னும், பானுகா ராஜபக்சே 40 ரன்னும், லிவிங்ஸ்டன் 10 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர்.

குஜராத் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று இருந்தது. அதற்கு பஞ்சாப் முட்டுக்கட்டை போட்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் புதுமுக அணியான குஜராத் சிறப்பாக விளையாடுகிறது. அந்த அணி சேசிங் செய்வதில் நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்தும் குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் 170 ஓட்டத்தை எடுத்திருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து மட்டையிலக்குடுகளை இழந்தோம். முதலில் மட்டையாட்டம் செய்ததற்கான எனது முடிவை நான் ஆதரிக்கிறேன்.

ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு சீரான பாதைக்கு திரும்புவதில் முயற்சிக்க வேண்டும். நாங்கள் நன்றாக சேசிங் செய்து வருகிறோம்.

ஆனால் எங்களது பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை உறுதிசெய்ய விரும்பினோம். ஆனால் சரியான ஆட்டம் வரும்போது முதலில் மட்டையாட்டம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முதலில் மட்டையாட்டம் செய்யும்போது நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். எந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பது பற்றி ஆலோசித்து அதில் கவனம் செலுத்துவோம். தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் நாங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இருந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறும்போது, ‘நாங்கள் சில வெற்றிகளை மீண்டும் தொடர விரும்புகிறோம். ஜானி பேர்ஸ்டோவிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெற முயற்சிக்கிறோம். இதனால் அவரை தொடக்க வீரராக அனுப்பினோம்.

நான் 4-வது வீரராக களம் இறங்குகிறேன் என்று சொன்னேன். ஷிகர் தவான் நிலைத்து நின்று விளையாடி நார் விலிங்ஸ்டன் ஆடிய விதம் நன்றாக இருந்தது. வெற்றிபெற முடியும் என்று உறுதியானதும் ரன்ரேட்டை அதிகரிக்க விரும்பினோம். இதனால் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »