Press "Enter" to skip to content

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்- கடைசி நிமிட கோல்களால் வெற்றி

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தோல்வி விளம்பில் இருந்த ரியல் மாட்ரிட் கடைசி நிமிட கோல்களால் வென்று மான்செஸ்டர் அளிக்க அதிர்ச்சி அளித்தது.

மாட்ரிட்:

கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த அரை இறுதியின் 2வது சுற்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. 73வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரியாத் மக்ரேஸ் கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் 89வது நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. 90வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ரோட்ரிகோ கோல் அடித்தார். நேரம் விரயத்துக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ரோட்ரிகோ (91வது நிமிடம்) மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தது. அரை இறுதியின் முதல் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இருந்தது. அரை இறுதி சுற்று முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

95வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கரிம் பென்சிமா கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அரை இறுதியின் இரு சுற்று ஆட்டங்களின் முடிவில் ரியல் மாட்ரிட் 6-5 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வி விளம்பில் இருந்த ரியல் மாட்ரிட் கடைசி நிமிட கோல்களால் வென்று மான்செஸ்டர் அளிக்க அதிர்ச்சி அளித்தது. மே 29-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் லிவர்பூல் அணியுடன் (இங்கிலாந்து) ரியல் மாட்ரிட் மோதுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »