Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தான் ஆடிய 10 ஆட்டங்களில் குஜராத் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

மும்பை:

ஐபிஎல் தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை அணி 20 சுற்றுகள் முடிவில் 6  மட்டையிலக்கு இழப்பிற்கு 177  ஓட்டங்கள் எடுத்துள்ளது. இஷாந்த் கிஷன் 45 ரன், ரோகித் சர்மா 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட்  21 பந்தில் 44 ஓட்டத்தை குவித்து களத்தில் இருந்தார்.

இதையடுத்து 178  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, ஷுப்மான் கில்லும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.

அணியின் எண்ணிக்கை 106 ஆக இருக்கும்போது ஷுப்மான் கில் 52 ஓட்டத்தில் அவுட்டானார். சிறிது நேரத்தில் சஹா 55 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 14 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி 24 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், குஜராத் அணி 5 மட்டையிலக்கு இழப்புக்கு 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் மும்பை 5 ஓட்டத்தை வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது மும்பை பெறும் 2வது வெற்றி ஆகும். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »