Press "Enter" to skip to content

உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும்- ஹர்பஜன் சிங் விருப்பம்

150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் பருவத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர்தான் உம்ரான் மாலிக். ஐதராபாத் அணியை சேர்ந்த இவர் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர். இவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

உம்ரான் மாலிக் குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

உம்ரான் மாலிக் எனக்கு மிகவும் பிடித்த வீரர். சிறந்த பந்து வீச்சாளரான அவரை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். உம்ரான் மாலிக் அதிவேகப்பந்து வீச்சாளராக அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. 2022 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் பும்ராவுக்கு துணையாக உம்ரான் மாலிக்கை களமிறக்க வேண்டும்.

150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் ஆடியதில்லை. எனவே, இது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை தேர்வு செய்திருப்பேன். 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »