Press "Enter" to skip to content

ஆசிய கோப்பை ஹாக்கி- இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்

இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »