Press "Enter" to skip to content

கிரிக்கெட் வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டையும் கண்டுவிட்டேன்- கண் கலங்கிய விராட் கோலி

தற்போது 15-வது ஐபிஎல் பருவத்தில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார்.

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

விராட் கோலி கடைசியாக சதம் அடித்த 2 ஆண்டுகள் ஆகிறது. 

தற்போது 15-வது ஐபிஎல் பருவத்தில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார். இதில் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட் ஆனார்.

அவரது ஐபிஎல் வாழ்க்கையில் முதன்முறையாக கோலி மூன்று கோல்டன் டக் அவுட்டுகளை பெற்றார். 

இதுகுறித்து சமீபத்தில் விராட் கோலி பேட்டி ஒன்றை பேசியிருந்தார்.

பேட்டியின்போது நெறியாளர் உங்கள் வீட்டில் விலங்குகள் எதுவும் வளர்க்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு கோலி பதிலளிக்கும் முன்பே, உங்களுக்கு சமீபத்தில் 2 டக்குகள் கிடைத்ததே என கோலி டக் அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டார்.

இதற்கு சிரித்தபடி பதிலளித்த கோலி, ‘நான் 2 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆனேன். இரண்டாவது முறை அவுட் ஆன பிறகு, உதவியில்லாமல் கைவிடப்பட்டது போல தவித்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததே இல்லை. அதனால் தான் நான் சிரித்தேன். 

நான் இப்போது அனைத்தையும் பார்த்துவிட்டேன். நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நான், இந்த விளையாட்டு எனக்கு காட்டிய ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் பார்த்துவிட்டேன்’ என உருக்கமாக கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »