Press "Enter" to skip to content

ஐ.பி.எல் தொடரில் குறைந்த பந்துகளில் 2,000 ஓட்டங்கள் – ரசல் புதிய சாதனை

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் எடுத்ததுடன், 3 மட்டையிலக்குகளையும் கைப்பற்றிய ஆண்ட்ரூ ரசல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். 

அடுத்து விளையாடிய ஐதராபாத் அணி  20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் 14-வது ஓட்டத்தை எடுத்தபோது குறைந்த பந்துகளில் 1,115 பந்துகளில் 2,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரசல் படைத்துள்ளார்.

ஆண்ட்ரூ ரசல் 97 போட்டிகளில் விளையாடி 2,030 ரன்களை எடுத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »