Press "Enter" to skip to content

மாமல்லபுரத்தில் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிக்கு கூடுதல் அரங்கம்- பணிகள் தீவிரம்

தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்கப்படுகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ந் தேதி வரை 44வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” விளையாட்டு போட்டி நடக்கிறது.

இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். விளையாட்டு அரங்கம் அமைக்க 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் மற்றும் மின் ஒளி விளக்குகள் அமைக்க 2,000 கி.வா, மின்சாரமும் தேவைப்படுகிறது.

தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்க அரசால் உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து “போர் பாய்ண்ட்ஸ்” வாகன நிறுத்தம் பகுதியை அரங்கமாக மாற்றும் பணி துவங்கியது. அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணிகளையும் மின் வாரியத்தினர் துவங்கி உள்ளனர்.

போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் தலைமை நிர்வாக இயக்குனர் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »