Press "Enter" to skip to content

பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்- இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா?

குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.

புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 18 புள்ளிகளும் (9 வெற்றி, 5 தோல்வி) பெற்று முறையே 2-வது , 3-வது இடங்களை பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 6 தோல்வி) 4-வது இடத்தை பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 5-வது இடத்தையும் (7வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் 6-வது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முறையே 9-வது, 10-வது இடங்களில் உள்ளன.

இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆப் சுற்று நாளை (24- ந் தேதி) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ-பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.

எலிமினேட்டர் 25- ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27-ந் தேதியும், இறுதிப்போட்டி 29-ந் தேதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணி ‘லீக் முடிவில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (413 ரன்), சுப்மன்கல் (403 ரன்), மில்லர் (381 ரன்), விர்த்திமான் சஹா, ராகுல்திவேதியா, ரஷித்கான், முகமது ஷமி (தலா 18 மட்டையிலக்கு), போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ரஷித்கான் ‘ஆல்ரவுண்டு’ பணியில் நல்ல நிலையில்இருக்கிறார்.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் மட்டையாட்டம்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 629 ஓட்டங்கள் குவித்து இந்த பருவத்தில் முதல் இடத்தில் உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் (374 ரன்), படிக்கல்(337 ரன்), ஹெட்மயர் (297 ரன்), ரியான் பராக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் 26 மட்டையிலக்கு கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா (15 மட்டையிலக்கு), போல்ட் (13 மட்டையிலக்கு) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். அஸ்வின் ஆல்ரவுண்டு பணியில் ஜொலித்து வருகிறார்.

இந்த பருவத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதின. இதில் ராஜஸ்தானை 37 ஓட்டத்தில் குஜராத் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »