சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 மட்டையிலக்கு இழந்து தத்தளித்த நிலையில், 4வது மட்டையிலக்குடுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ஓட்டங்கள் சேர்த்தது.
புனே:
மூன்று அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 5 மட்டையிலக்குடுக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து, 151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ஓட்டங்கள் குவித்தார்.
லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 மட்டையிலக்குடுக்கு 151 ஓட்டங்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 மட்டையிலக்குகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar