Press "Enter" to skip to content

ஹர்திக் பாண்ட்யா திறமை மேலும் அதிகரித்து இருக்கிறது- கிரண் மோரே பாராட்டு

ஹர்திக் பாண்ட்யா மட்டையாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார் என இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பர் கிரண் மோரே பாராட்டி உள்ளார்.

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 சுற்றிப் போட்டி தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. அந்த அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

ஹர்த்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுகள் குவிந்தன. அதேபோல் அவர் மட்டையாட்டம், பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பை அளித்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பர் கிரண் மோரே பாராட்டி உள்ளார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்னை பொறுத்தவரை சிறந்த தருணம் என்னவென்றால் குஜராத் அணி விளையாடிய விதம்தான். குறிப்பாக ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக வந்து கோப்பையை வென்றது, தனிப்பட்ட செயல்திறனில் சிறப்பாக செயல்பட்டதாகும்.

மும்பை அணியில் இருந்து சென்று புதிய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது எளிதானதல்ல. ஹர்திக் சகோதரர் குர்ணல் பாண்ட்யா எனது அகாடமியில் சேர்ந்தார். அங்கு ஹர்திக் பாண்ட்யா சுற்றி திரிவார். அப்போது வலைகளுக்கு பின்னால் ஓடி பந்தை பிடிப்பார். அவரை அழைத்து வரும்படி குர்ணல் பாண்ட்யாவிடம் கூறினேன். அப்போது ஹர்திக்கிடம் கிரிக்கெட் மீதான வேட்கை அவரது கண்களில் இருப்பதை பார்த்தேன். அவர் எல்லா நேரத்திலும் சிறப்பாக விளையாட விரும்புகிறார். முன்பு அவர் முப்பரிமாண வீரராக இருந்தார். தற்போது நான்கு பரிமான வீரராக உள்ளார் என்று நம்புகிறேன்.

அவர் மட்டையாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார். தற்போது கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக உள்ளார்.

இதுபோன்ற திறமையான வீரர் தேசிய அணியில் இருப்பதை பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »